உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம் மற்றும் மலையக
தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில்
நேற்றைய தினம் நடைபெற்றது.
கடந்த 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
படுகொலை செய்யபட்ட உறவுகளையும் மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட
உறவுகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்தும் இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

