தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான கேமன்குமார மற்றும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நேற்றுமுன்தினம்(26) இடம்பெற்ற இச்சந்திப்பில், வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

