Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசீரற்ற முறையில் சீர் செய்யப்படும் மன்னார் மாவட்டத்தின் பிரதான வீதி

சீரற்ற முறையில் சீர் செய்யப்படும் மன்னார் மாவட்டத்தின் பிரதான வீதி

மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளத்பார் புகையிரத நிலைய வீதி பல வருடங்களாக ஒழுங்கான பராமறிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றசாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்

முன்னதாகவே குறித்த வீதியை புணரமைப்பு செய்வதற்கான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி சென்றது

இந்த நிலையில் புகையிரத பயணங்களுக்குக்காக செல்லும் பொது மக்கள் உட்பட சாந்திபுரம் செளத்பார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

இவ்வாறான பின்னனியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

குறிப்பாக வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட ஏனோ தானோ என இடம் பெறுவதாகவும் அவையும் குறுகிய காலப்பகுதியில் சேதமடைவதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இவ்வாறான நிலையில் பயன்படுத்த முடியாத வீதியை சீரக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணத்தை வீணக்குவதை விடுத்து வீதியை முழுமையாக புணரமைத்து தருமாறு அப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments