Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநான்கு சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய தமிழரசுக் கட்சி

நான்கு சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய தமிழரசுக் கட்சி

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி
இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம்
செலுத்தியது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும்
19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

அதற்கமைவாக,  வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு
தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments