Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபைபர் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள்

பைபர் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நடுக்கடலில்
பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு
கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம்
குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எஞ்சின் பழுது
காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது
தெரியவந்துள்ளது.

இந்நிலையில்இ மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா
பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும்
தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments