கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு மாதகலில் இளைஞன் ஒருவர் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது இனுவில் பகுதியில் இருந்து இளைஞர் குழுவொன்று மாதகல் கடற்கரையில் சமைத்து உணவை உண்பதற்காக 11 மணிக்கு வருகை தந்து 3.15மணியளவில் கடலில் குளிக்க சென்றுள்ளனர் .
இந்நிலையில் பிரேமானந் சாருடன் எனும் 20வயதான கோயில் வாசல் காங்கேசன்துறை வீதி இனுவில் பகுதியினை சேர்ந்த இளைஞர் கடலில் குளிக்க முற்பட்ட பொழுது கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் பொலிசாரின் உதவியுடன் மாலை 5.30மணியளவில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபடவுள்ள நிலையில் இளவாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

