Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசபந்துவிற்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவர அனுமதி

தேசபந்துவிற்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவர அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளஇ பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர்
தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (24) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்
பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க
தெரிவித்தார்.

வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த
தேசபந்து தென்னகோன்,  அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர்
நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதன்போது,  மாத்தறை நீதவான் அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்க உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்இ கண்டி தும்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு,  தனது உணவை வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைத் திணைக்களம்,  அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

​​அதன்படி,  தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளை உணவையும் வீட்டிலிருந்து
கொண்டு வந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments