Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅட்சய திருதியை நாளில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்

அட்சய திருதியை நாளில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்

கொழும்பு – ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போதுஇ நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும்
கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள்
பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments