Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்
இன்று காலை 9.30 மணியளவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை
நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் இந்த கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து,  முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,  அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து,  முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

அத்தோடு,  முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதன்போது தமிழின படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ். நகரிலிருந்து
ஆரம்பமானது

யாழில் பயணத்தை தொடங்கிய இந்த நினைவு ஊர்தி நாளை 13ஆம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சியிலும்,  14ஆம் திகதி வடமராட்சியிலும்,  15ஆம் திகதி கோப்பாய்,  மானிப்பாய்,   நல்லூர் பிரதேசங்களிலும்,  16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும்,  17ஆம் திகதி வேலணையிலும்,  18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments