தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான
அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ
விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்
அதன்படி இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா,
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்
இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ,
கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை
நடாத்தவுள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடதக்கது

