நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி
இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

