கற்பிட்டி கண்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபா பெறுமதியான திமிங்கல வாந்தியுடன்
ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம்
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திமிங்கல வாந்தியானது கடலில் மிதந்து கொண்டிருந்துள்ள நிலையில்
கண்டக்குளி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் படகின் மூலம்
இரகசியமாக எடுத்து வரப்பட்டு விற்பனை செய்வதற்காகப் பாதுகாப்பாகப்
புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த திமிங்கில வாந்தியானது 35 கிலோ நிறையுடையது எனவும் இதன் மதிப்பு
10 கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

