Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் விருந்து நிகழ்வொன்றின்போது, மர்ம நபர்களால் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளர்

அலபாமா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரிலுள்ள தனியார் மண்டபமொன்றில்,
மே தினத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்து நிகழ்வொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்,
ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது,  நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளநிலையில்,  மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து,  அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஒட்டம்பிடித்ததில்,  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்துஇ சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments