Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகெஹலிய ரம்புக்வெல்லவின் விசாரணை எப்போது

கெஹலிய ரம்புக்வெல்லவின் விசாரணை எப்போது

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன்
ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்னாள் விநியோகப் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்கவினால் ரிட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரிட் மனுவை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம்
இம்மாதம் 30 ஆம் திகதி கூடுமாறும் உத்தரவிட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments