இந்தியா – மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று
நேற்று மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் – சம்பில்துறையில்
கரையொதுங்கியது.
பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார்
ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர்.
குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து
செல்லப்பட்டுள்ளதுடன் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

