Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின்
சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும் இவர் லிந்துலை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு பின் பிரேத பரிசோதணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணைகள் செய்து வருவதாகவும், இச் சம்பவத்தில்
உயிரிழந்த பெண் தன்னுயிரை மாய்த்து கொண்டார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments