Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போதுஇ பிரித்தானிய பிரதமரிடம் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் மனுவானதுஇ, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துஇ இனப்படுகொலையை
தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம்,  றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர்.

இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல,பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவானது,இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஆதாரங்களும்
சமர்பிக்கபட்ட பின்னரும் குனுஊழு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு
சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர்.

18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம்,
நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்

பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்,
கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று,  சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்’ என்றும் இலங்கையில் இடம்பெற்ற
இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments