வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிபர் அரசியலமைப்பின் 34வது சரத்தில்
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையின் அடிப்படையில் நாடாளாவிய ரீதியில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 6 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார்

