Tuesday, September 29, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்வியட்நாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ

வியட்நாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ

வியட்நாம் – மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வியட்நாமின் தலைநகரில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிரதேசமான
காவ் கியே மாவட்டத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து புகை மற்றும் நச்சு வாயு வெளியேறிய நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தீ விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த கட்டிடத்தின் முற்றம் மின்சார சைக்கிள்களை விற்பனை செய்வதற்கும்
பழுதுபார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பெருமளவான மோட்டார் சைக்கிள்கள்,  மின்சார சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகள் தீயில் கருகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments