Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு

ரஷ்ய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் தற்போது, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

இம் மாத ஆரம்பத்தில்இ ரஷ்ய படையினர் ஆக்கிமித்து உள்நுழைந்த, கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் தற்போது தமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரவித்துள்ளார்.

எனினும், கார்கிவ்; நிலைவரம் குறித்து ரஷ்ய தரப்பினர் கூறும் தகவல் முரணானது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எல்லைக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரில் பாதியை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய நாடாளுன்ற உறுப்பினர் விக்டர் வொடோலட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வாவ்சான்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றிய பின்னர், அருகிலுள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்லோவியான்ஸ்க், க்ரமடார்ஸ்க், போக்ரொவ்ஸ்க் ஆகிய நகரங்களையும் கைப்பற்றுவதற்காக ரஷ்ய இராணுவம் முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஇ கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments