Sunday, May 31, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்பாரிஸ் கொண்டாட்டங்களில் வன்முறை : 400க்கும் மேற்பட்டோர் கைது

பாரிஸ் கொண்டாட்டங்களில் வன்முறை : 400க்கும் மேற்பட்டோர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தின்போது
ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 400க்கும் மேற்பட்டோர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை
வீழ்த்திஇ பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் அணி வெற்றி பெற்றதைத்
தொடர்ந்து ரசிகர்களிடையே வன்முறை வெடித்துள்ளது.

இச்சம்பவத்தில் 7 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன்,  வாகனங்கள் மற்றும்
கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

ஹெங்கேரியில் நடைபெற்ற இறுதிப் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்த
நிலையில்,  பெனால்டி சூட்டில் PSG அணி 4-3 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக
இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக போட்டிக்கு முன்னரும் ரசிகர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே
மோதல் ஏற்பட்டதாகவும்,  கடந்த சீசன் கொண்டாட்டங்களில் உயிரிழப்புகளும்
பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments