Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை8 உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

8 உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய,  அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற
உணவுகள் கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

குறித்த தினம் 65 உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் 8 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments