பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் செந்தில் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
கலந்துரையாடலின் பின் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு தரப்பினரையும் அழைத்து இன்று தொழில் திணைக்களத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சொல்லி இருந்தார்கள். குறித்த கலந்துரையாடலில் தொழிற் சங்க உறுப்பினர்கள்
அனைவரும் கலந்துரையாடலுக்கு வந்து இருந்தார்கள். ஆனால் கம்பனிகள் யாவரும் கலந்துக்கொள்ளவில்லை.
அதனால் இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் அளிக்க கூறி இருந்தார்கள். கம்பனிகள் நீதிமன்றம் கூறுவதையும், தொழில் திணைக்களத்தின் பேச்சுக்களையும் மறுத்து வருகிறார்கள்.
இந்த கம்பனிகள் தோட்டங்களை விட்டு வௌியேறி தொழிலாளர்களை மதிக்ககூடிய கம்பனிகளுக்கு இந்த தோட்டங்களை வழங்குவது சிறந்தது ஒன்று என தெரிவித்தார்.

