மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி இளைஞர் அணி முன்னாள் தலைவர் மற்றும்
தமிழ் இளைஞர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும்
11, 12 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகளுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தமிழரசுக்கட்சி இளைஞர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் 11 திகதி விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
அதேவேளை தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை
செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுத்துள்ளது.
முன்னர் ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் மீண்டும் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

