நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த படம் கில்லி.
அண்மையில் ரீ-ரிலீஸ் ஆன இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவிலும் கொண்டாடினார்கள், வசூலும் அமோகமாக நடந்தது
இந் நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
மே மாதம் அஜித் ஸ்பெஷல் ஜுன் மாதம் வந்தால் விஜய் ஸ்பெஷல் தானே வேறு என்ன.
விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜுன் 22 இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இப்போது மக்களுக்கு அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் வரும் ஜுன் 21ம் தேதி விஜய்யின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த துப்பாக்கி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம். இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

