Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2019/ 2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை
தாதியர் டிப்ளோமாவிற்கு உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை இவ்வருடத்தின்
ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் அமைந்துள்ள
தாதியர் கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

முதல் தடவை நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள முடியாமல்போன பரீட்சார்த்திகளுக்காக  மீண்டும் ஒரு சந்தர்ப்பம் மே மாதம் 26 ஆம் திகதி வழங்கப்பட்டது.

நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட பரீட்சார்த்திகளிடையே தாதியர் டிப்ளோமா
பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட முன்,
புள்ளிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அப்புள்ளிகள் தொடர்பான தகவல்களை ஜூலை மாதத்தினுள் வழங்க முடியும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்று உடனடியாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சாமிக்க எச் கமகே தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments