Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅநுராதபுரத்திற்கு விசேட பஸ் சேவை

அநுராதபுரத்திற்கு விசேட பஸ் சேவை

மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்படுவதால்
பொசன் காலத்தில் அதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித அல்விஸ் தெரிவித்தார்.

இதன்படி,  நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை,  அநுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு வரும் மக்களின் வசதிக்காக உரிய பஸ் சேவை அமுல்படுத்தப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.

வடமத்திய,  வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக கம்பஹா,  கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து
விசேட பஸ் சேவையும் உள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

சாதாரண போக்குவரத்து சேவைக்கு மேலதிகமாக இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும்,  தேவைக்கு ஏற்ப அதிக பஸ்களை பயன்படுத்துமாறு டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments