Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇந்திய வெளிவிவகார அமைச்சர்- ஜனாதிபதி ரணில் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்- ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகின்றார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments