Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் சாவு

யாழில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் சாவு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி,  கைதடி – நுணாவில் பகுதியில் டிப்பர் வாகனம்
மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாக
தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம்,
குறித்த வீதியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments