தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா
தொடர்ந்து விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும் நடித்தார்.
தமிழ்இ தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தியில் ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படமும் வசூலை குவித்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒருவர், ‘ஆண்களை நம்புவதைவிட பயங்கரமானது வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று ராஷ்மிகாவின் ‘அனிமல்’ படத்தில் இடம்பெற்ற காட்சியை பகிர்ந்தார்.
அதற்கு பதில் அளித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில், ”முட்டாள்களை நம்புவது பயங்கரமானது. ஆனால் ஆண்களில் நிறைய பேர் நல்ல மனிதர்களாக கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நம்புவது மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

