Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் மூன்று பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி,  பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட  வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்,  நேற்றைய தினம் மூன்று பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments