Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஜெய்சங்கர்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஜெய்சங்கர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை வடக்குஇ கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் 8 தலைவர்கள் ஒருமித்து சந்தித்துக் கலந்துரையாடினர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,  சிவஞானம் சிறீதரன்,  இரா.சாணக்கியன்,
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.,  புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி.,  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்குஇ கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று சந்திப்பில் பங்கேற்ற சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவர் திடீரெனச் சுகவீனமடைந்துள்ளமையால்  பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments