பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஜெல்லிமீன் உடலில் பட்டதால்
ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக 10 பேர் உடனடியாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெல்லிமீன் அவர்களது உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல்இ அரிப்பு மற்றும் வலி
போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனையடுத்தே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் பாணந்துறை கடலில் நீராட செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

