Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநெடுந்தீவு இளைஞன் படுகொலை: மூவர் கைது

நெடுந்தீவு இளைஞன் படுகொலை: மூவர் கைது

நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று
சந்தேகநபர்களும் இன்று அதிகாலை நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பிராந்திய குற்ற தடுப்ப பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் நான்கு சந்தேகநபர்கள் தொடர்புபட்ட நிலையில் , ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் தலைமறைவாகியிருந்தனர். தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்ய கோரி கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் ஊரவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தலைமறைவாகி நெடுந்தீவில் பற்றைக் காடுகளுக்குள் பதுங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டனர்.

விசாரணைகளுக்கு பின்னர் நால்வரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments