Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது

யாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது

யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம்
60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்இ தன்னை சர்வதேச மனித உரிமைகள் காப்பகத்தில் பணியாற்றுவதாக
அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் மனித உரிமை காப்பகத்தின் ஊடாக இளைஞரை
வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் எனக் கூறி அவரிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காததால்,  பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளில்,  குறித்த நபர் மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாகவும்,  கொழும்பில் வசிப்பதாகவும் இளைஞனிடம் கூறியது பொய் எனவும் இ கிழக்கு மாகாணத்தை சொந்த இடமாக கொண்டு ,  கிழக்கு மாகாணத்திலையே வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வேறு நபர்களையும் இவ்வாறு ஏமாற்றியுள்ளாரா ? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments