Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரு பிள்ளைகளின் தாய் மரணம்

இரு பிள்ளைகளின் தாய் மரணம்

குளவி கொட்டுக்கு இலக்கானஇ மஸ்கெலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர்இ
பேராதனை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில்
ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான,  சிவகுமார் அந்தோனி டெரிண்டா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மஸ்கெலியா கிலன்டில் பிரிவில்இ 19 ம் திகதி பணிபுரிந்து கொண்டு இருந்த போது,  குளவி கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்இ மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் மாற்றப்பட்டார்.

எனினும்இ மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே மரணமடைந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments