கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

