Saturday, October 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதியின் விசேட உரை:வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது

ஜனாதிபதியின் விசேட உரை:வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது

2022 ஆம் ஆண்டில்,  எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடன் செலுத்த செலவிட வேண்டியிருந்ததுடன்,  2027 முதல் 2032 வரையான காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 இற்கும் குறைவான தொகையே கடன் செலுத்த ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நாடு என்று உத்தியோக பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்துஇ உலக நாடுகள் அனைத்தும் எங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் போன்று வெளிநாட்டுக் கடன் உதவியோடு நம் நாட்டில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன்,  இந்தக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன்,  அந்த அனைத்துத் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்

இருதரப்புக் கடன் வழங்குநர்கள் எங்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமை மூலம்,  நமது நாடு மீதான சர்வதேச நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  எமது கடன் பத்திரத்தைக்கூட ஏற்றுக்கொள்ளாத சர்வதேச சமூகம்இ தற்போது எமக்கு நம்பிக்கைச் சான்றிதழை வழங்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடன் வழங்குநர்களுடன் இலங்கை கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரதமர், ஜூலை 02ஆம் திகதி நடைபெறும் விசேட பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார் என்றும்,  அந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க ஒத்துழைக்குமாறு நாட்டை நேசிக்கும் அனைத்துப் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கடினமான பாதையில் சென்ற நாடு,  முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த அமைச்சர்கள்,  அதிகாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினர்களுக்கும் மற்றும் பொறுமையுடன் செயற்பட்ட நமது நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையில் நன்றி தெரிவித்தார்

நாட்டின் எதிர்காலப் பயணத்தை சீர்குலைக்க சிலர் முயன்றாலும்இ எதிர்காலத்தில் ஒருநாள்,  நாட்டைக் காட்டிக் கொடுத்தமைக்காக, தங்களின் பிள்ளைகளின் முன்னால் வெட்கப்பட நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் போது மக்களுக்கு சலுகைகளை வழங்கியதாகவும், எதிர்காலத்திலும் சரியான பாதையில் சென்று பொருளாதாரம் வலுப்பெறும்போதுஇ தற்போதைய கஷ்டங்களை படிப்படியாகக்
குறைத்துக் கொள்ளலாம் என்றும்இ குறிப்பிட்ட ஜனாதிபதிஇ வேலை நிறுத்தங்களாலும், அச்சுறுத்தல்களாலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று தனது விசேட உரையில் வலியுறுத்தினார்.

பொருளாதாரம் பாதாளத்தில் இருந்த நாட்டைக் கட்டியெழுப்ப சிலர் பல்வேறு நிபந்தனைகளையிட்டு தப்பித்துக் கொள்ள முயன்ற சந்தர்ப்பத்தில்,  எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்த சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அதற்கான அனுபவமும் திட்டமிட்ட
கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையும்,  அதேபோன்று சர்வதேச ஆதரவைப் பெறும் இயலுமையும் தனக்கு இருந்ததாகத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments