Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் மாவட்ட செயலாளர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ் மாவட்ட செயலாளர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மருதலிங்கம் பிரதீபன்
இன்று காலை தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில்
காலை 09 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு வரவேற்பளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்றதுடன் தமது அலுவலக கடமைகளையும் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் ஏஸ்.ஸ்ரீமோகன்,  மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் நேற்றையதினம்(03) பிரதமர் அலுவலகத்தினால் வைத்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நியமனம் ம.பிரதீபனுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments