Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்

அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன்
சங்கமமானது.

அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னா் திருகோணமலை இந்து மயானத்தில் தகனக் கிாியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி திருகோணமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன்,  இறுதி அஞ்சலி நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டிருந்தனா்.

உடல் நலக்குறைவு காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 30 ஆம் திகதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments