Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவவுனியாவில் 4 பெண்கள் கைது

வவுனியாவில் 4 பெண்கள் கைது

வவுனியா,  தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சாரத்தில்
ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாஇ தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார்
விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது,  அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments