Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தையின் இறுதிச் சடங்கில் மகனுக்கு நேர்ந்த அவலம்

தந்தையின் இறுதிச் சடங்கில் மகனுக்கு நேர்ந்த அவலம்

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த மகன் நேற்று கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில்இ தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன்போது இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் எனவும்இ ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments