Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெந்தில் தொண்டமான் - எஸ் .ஶ்ரீதரன் கலந்துரையாடல்

செந்தில் தொண்டமான் – எஸ் .ஶ்ரீதரன் கலந்துரையாடல்

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments