Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் படுகாயம்

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் படுகாயம்

அவிசாவளை,  மாதோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர்
படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு
சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments