Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅம்பாறையில் மர ஆலையில் தீ விபத்து

அம்பாறையில் மர ஆலையில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்இ மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (22) மாலை குறித்த மர ஆலையில் தீ பரவியதுடன்,  பிரதேசவாசிகள்,  கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள்,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும்,  இதன் போது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments