யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்இ நேற்றையதினம்
உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டுஇ மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக உரும்பிராய் வேம்பன் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அதேவேளை குறித்த மரணமானது மாரடைப்பு காரணமாக சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

