Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை
முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்று இன்று ஹட்டன் நகரில் இடம்பெற்றது.

பகல் 12.00 மணியளவில் ஹட்டன் நகரின் மத்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம்
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்ததுடன் இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம் சோ.ஸ்ரீதரன் ராம் மற்றும் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் உட்பட பெருந்தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments