Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுதந்திர கட்சிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

சுதந்திர கட்சிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

மஹிந்த அமரவீரஇ லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கியமையை தடுத்துஇ முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று  மீள அழைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி,  ஒக்டோபர் 9-ம் திகதி வரை அதற்கான தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண,  துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அந்த தீர்மானத்தை வலுவிழக்கச்செய்யுமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments