Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து

மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால்
மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில்
இடம்பெற்றுள்ளது

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்துஇ ஹயஸ் வாகனம்இ டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளன.

ஒரு கட்டத்தில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோதுஇ எதிரே வந்த வாகனத்தால் சடுதியாக ஹயஸ் வானை திருப்ப முற்பட்ட போது பேருந்து பின்பகுதியுடன் ஹயஸ் வாகனம் மோதியது.

ஹயஸ் வாகனத்துக்கு பின்னால் வந்த டிப்பரும் ஹயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன்இ பேருந்தின் பின்பகுதி,  டிப்பரின் முன்பகுதி என்பன சிறியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தின் போது ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத நிலையில் ஹயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments