Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் காயங்களுடன் சிசுவின் சடலம் - தாய் கைது

யாழில் காயங்களுடன் சிசுவின் சடலம் – தாய் கைது

யாழில் பிறந்து 45 நாட்களேயான சிசு ஒன்று இன்று (4) அதிகாலை பரிதாபமாக
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிசுவின் கைகள் மற்றும் கால்கள் முறிந்திருந்தமை,  தலையில் அடிகாயங்கள்,  காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள்,  உடலில் கண்டல் காயங்கள் உடற்கூற்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில்இ குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்வதாகவும்இ தாயின் பராமரிப்பிலேயே குழந்தை இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments